இந் நாட்களில் இணையத்தளம் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை தயவுடன் கவனத்திற்கொள்ளவும்.

සිංහල, දෙමළ, ඉංග්‍රීසි හා විදේශ භාෂා පාඨමාලා ආරම්භය 2024 සැප්තැම්බර් මුල් සතියේ පැවැත්වේ.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் அந்நியநாட்டு மொழிப்  பாடநெறிகள், 2024 செப்டெம்பர் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

The Sinhala, Tamil, English and foreign language courses will commence in the first week of September 2024.

 

Advertisement

Download Application

Paper Advertisement:

 විදේශ භාෂා පුහුණු පාඨමාලා සඳහා සුදුසුකම්ලත් භාෂා උපදේශකවරුන් ලියාපදිංචි කිරීම 2024   

அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மொழிஆய்வு கூடத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற  வெளிநாட்டு மொழிப் பயிற்சிப்   பாடநெறிகள் - 2024 

Qualified foreign language instructors will be registered for the year 2024 for foreign language courses

 

Download 

Sinhala

Tamil 

English

Go to bhashawa.lk website 

 

 

அரசகரும மொழிகள் திணைக்களத்தின் நூலகமானது புத்தகங்களின் உசாத்துணையைப் பெற்றுக்கொள்வதற்காக 2023.07.06 ஆம் திகதியிலிருந்து மு.ப 10.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும். ஆகவே, அகராதிகள், கலைச்சொற்றொகுதிகள், அரசகரும மொழிக்கொள்கை மற்றும் அதன் அமுலாக்கம் மீதான வெளியீடுகளின் பெறுமதிமிக்க தொகுப்பு மற்றும் பல்வேறு விடயங்களின் கீழ் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் ஆகிவற்றிற்கான அணுகுவழி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

  1. மும்மொழி அகராதி
  2. குருட்டு கீ (Sigiri Graffiti)
  3. திரிபீடகம்
  4. சுயசரிதைகள்
  5. கலைக்களஞ்சியங்கள்
  6. 1956 ஆம் ஆண்டில் இருந்து வெளியிடப்பட்ட திணைக்கள வெளியீடுகள்

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களமும்  தமிழும் அரசகரும மொழிகளாகவும்  ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது யாதெனில் இலங்கைப் பிரசைகள் அனைவரினதும் மொழி உரிமையை பாதுகாப்பதுடன், அதற்கான சட்டச் சூழலொன்றை கட்டியெழுப்புவதுமாகும். மொழி உரிமை மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து, உயர் நீதிமன்றத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசியலமைப்பினால் இடமளிக்கப்படுவதன் மூலம், இதற்கான பின்புலம் மேலும் வலுப்படுத்தப்படுகின்றது. மேலும், 2019 ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் முதலாம் திகதி (07.01) அரசகரும மொழிகள் தினமாகவும், அத்தினத்திலிருந்து ஒரு வாரம் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது, மொழி உரிமையின் உலகலாவிய தன்மையை வலுப்படுத்துவதாகவும், பல்வகைமையூடாக ஐக்கியத்தைப் பேணும் அளப்பரிய நடவடிக்கையாகவும் சுட்டிக்காட்டுவது  பொருத்தமானதாக அமையும்.

ஓர் இராஜாங்க அமைச்சிற்கு அல்லது ஒரு நிறுவனத்திற்கு மட்டும் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுச் செயற்படுவதென்பது  சாத்தியமானதல்ல. இதற்காக சகல அரச நிறுவனங்களும் அதேபோன்று சகல அரச ஊழியர்களும் கைகோர்த்து செயற்பட வேண்டிய தேவை முன்னொருபோதுமில்லாதவாறு இன்று எழுந்துள்ளது. இத்திடசங்கற்பத்தை அடிப்படையாகக்கொண்டு அரச நிறுவனங்களில் மொழித் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை பிரபல்யப்படுத்தல், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கீழ் தேசிய மொழிபெயர்ப்பு நிலையத்தை நிறுவுதல், அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய  அரச உத்தியோகத்தர்களிடம் பொறுப்புகளை வழங்குதல் போன்ற பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2023 அரசகரும மொழிகள் வாரத்தை மையமாகக்கொண்டு இம்முறை அரசகரும மொழிகள் திணைக்களம் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இதில் 2023 யூலை 06 ஆம் திகதி அரசகரும மொழிகள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை முக்கியமாகக் குறிப்பிடலாம். இதில் இடம்பெறவுள்ள முக்கிய  அங்கங்கள் வருமாறு :  

  1. “இனங்களுக்கிடையிலான நல்லுறவைப் பேணுவதற்கு மொழியை ஆக்கபூர்வமாக ஈடுபடுத்தல்” எனும் தலைப்பில் பிரதான சொற்பொழிவு இடம்பெறுதல்
  2. பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு தொடர்பான விசேட பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களை இலக்காகக்கொண்டு தொகுக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் கைந்நூலை வெளியிடுதல்
  3. மொழிபெயர்ப்புக் குழாத்திற்கு உள்வாங்குவதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல்
  4. தெரிவுசெய்யப்பட்ட சில நூலகங்களுக்கு திணைக்கள வெளியீடுகளை இலவசமாக வழங்குதல்
  5. சிங்களம் மற்றும் தமிழ் அடிப்படை மற்றும் உயர் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பாடநெறியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்குதல்

அரசகரும மொழிகள் வாரம் வெற்றிகரமாக நிகழ்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் மற்றைய சகோதர இனத்தவர்களின் மதிப்பையும் மரியாதையையும் புரிந்து கொள்வதற்கு மொழியின் முக்கியத்துவத்தை மென்மேலும் புரிந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 

பிரின்ஸ் சேனாதீர
அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம்

 

 

பரீட்சை நடைபெற்ற திகதி : 20.12.2022

பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் பெயர் பட்டியல் Click Here

பரீட்சை நடைபெற்ற திகதி : 27.11.2021

பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் பெயர் பட்டியல் Click Here

 

மார்ச் மாதம் 02 ஆம் திகதியில் இடம்பெறுகின்ற சிங்கள மொழித் தினத்தை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சியொன்று 2023 மார்ச் மாதம் 02 ஆம் திகதி குருநாகல் கனேவத்தை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கனேவத்தை பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே​ நடாத்தப்பட்ட மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்குதல், கனேவத்தை பிரிவிலுள்ள 17 பாடசாலை நூலகங்களுக்கு அரசகரும மொழிகள் திணைக்களத்தின் நூல் வெளியீடுகள் அடங்கிய நூல் தொகுதிகளை வழங்குதல் அதேபோன்று மொழி தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு என்பவற்றுடன் கூடியதாக இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அரசகரும மொழிகள் திணைக்களமும், கனேவத்தை பிரதேச செயலகமும் இணைந்து இந் நிகழ்ச்சியை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

அரசகரும மொழிகள் திணைக்களமும் மொறட்டுவை பல்கலைக்கழகமும் இணைந்து, மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக பாவிக்கக்கூடிய “கணனி துணைக் கருவிகள்” தொடர்பில் தெளிவூட்டும் பயிற்சி நிகழ்ச்சியொன்று 2023.01.12 ஆம் திகதி நடாத்தப்பட்டது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவில் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்ச்சியில் 59 மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

 SITA IMG1  SITA IMG2
 SITA IMG3  SITA IMG4
 SITA IMG5

 

 

 

 

மொழி ஆய்வுகூடத்தினால்  நடாத்தப்படும் அனைத்து பாடநெறிகளின் ஆரம்ப நிகழ்ச்சி  2023.02. 07 ஆந் திகதி நடைபெறும்.

அன்றைய தினம் தாங்களுக்கு  பாடநெறிகளுக்காக பதிவு செய்யலாம்.