அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் செயன்முறை மொழிபெயர்ப்பு கற்கைநெறியின் சிங்களம்-தமிழ், சிங்களம்-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-தமிழ் ஆகிய பிரிவுகளில் எதிர்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஆர்வம், திறமை மற்றும் ஊக்கமிகு பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வேண்டப்படுகின்றன.

பின்வரும் தகைமைகளையுடையவராயின் தங்களுக்கான சிறந்த வாய்ப்பு காத்திருக்கின்றது.

 • அரசாங்க/ பகுதியளவிலான அரசாங்க நிறுவனமொன்றில் 3 வருடங்களுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பு அனுபவம்
 • மொழிப் பிரிவுகளிடையே (சிங்களம்-தமிழ், சிங்களம்-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-தமிழ்) மொழிபெயர்ப்பதற்கான சிறந்த திறன்
 • பல்வேறுபட்ட மென் திறன் பயிற்சி வழங்கலில் கற்பித்தல் அனுபவம்
 • பாடத்திட்டத்தை திட்டமிடும் திறன்
 • முன்வைத்தல் திறன்
 • உரிய மொழிப் பிரிவில் செவ்வையாக்க மற்றும் மீளாய்வுத் திறன்

பயிற்சியாளர்களுக்காக விண்ணப்பிக்கும் பரீட்சார்த்திகளுக்கான தெரிவு முறை

 • செயன்முறை மொழிபெயர்ப்பில் எழுத்துப் பரீட்சை             50 புள்ளிகள்
 • கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை            50 புள்ளிகள்

குறிப்பு:  

முதலில் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றி குறைந்தது 30 புள்ளிகளைப் பெற்று சித்தியடைதல் வேண்டும். பின்னர், சித்தியடைந்த பரீட்சார்த்திகள்  உரிய மொழிப் பிரிவில் 15 நிமிடங்கள் செயல்விளக்க பாடத்திட்டமொன்றைச் (எடுத்துக்காட்டு சார்ந்த) செய்துகாட்ட அவசியமான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.

நீங்கள் பெற்றுக்கொள்ளும் நன்மைகள்

நீங்கள் தெரிவு செய்யப்படின்,

 • அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மொழிபெயர்ப்பு பயிற்சியாளர் குழாத்தில் பதிவுசெய்யப்பட்டு அரசகரும மொழிகள் திணைக்களத்தின் தகைமை பெற்ற மொழிபெயர்ப்புப் பயிற்சியாளராக அங்கீகரிக்கப்படுவீர்கள்.
 • கனேடிய அரசாங்கத்தினால் நிதியுதவியளிக்கப்படும் செயற்திட்டமொன்றான தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்திட்டம் (NLEAP) உடன் இணைந்து அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) பட்டறையொன்றில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும்.
 • அரசகரும மொழிகள் திணைக்களத்தின் செயன்முறை மொழிபெயர்ப்பு கற்கைநெறியின் செயலமர்வுகளை நடாத்துவதற்கு நீங்கள் அழைக்கப்படுவதுடன் நடாத்தப்படுகின்ற ஒவ்வொரு செயலமர்வுக்கும் அங்கீகரிக்கப்பட்ட உயரிய பணிக்கொடுப்பனவும் செலுத்தப்படும்.
 • செயன்முறை மொழிபெயர்ப்பினைக் கற்பிப்பதற்கு பயிற்சியாளர்கள் தேவைப்படுத்தப்படும் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக ஏனைய நிறுவனங்களுக்கும் தகைமை பெற்ற பயிற்சியாளராக நீங்கள் பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

 

முடிவுத் திகதி: 2021 ஜூலை மாதம் 31 ஆம் திகதி