அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் www.bhashawa.lk. இணையதளங்கள் ஆகியவற்றில் மொழி அனுசரணையாளர்களாக தம்மைப் பதிவுசெய்ய எதிர்பார்த்திருக்கும் பரீட்சார்த்திகளுக்கான ஆட்சேர்ப்புப் பரீட்சையானது 2020 செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது. சிங்களம் – ஆங்கிலம், சிங்களம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய மொழிபெயர்ப்புக்களில் திறமை வாய்ந்தவர்கள் அரசகரும மொழிகள் திணைக்களம் அல்லது www.bhashawa.lk. இணையதளங்கள் ஆகியவற்றினூடாக 2020 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.