• உயர் தரத்திலான நூலகமொன்று அரசகரும மொழிகள் திணைக்களத்திலுள்ளது.
  • அரசகரும மொழிகள் திணைக்கள நூலகத்தில் மொழி குறித்து எழுதப்பட்ட நூல்களும், மொழி மற்றும் சமூக ஒருமைப்பாடு குறித்த விபரங்கள் உள்ளடங்கிய பெறுமதிமிக்க நூல்களும், அகராதிகளும்,  கலைக்களஞ்சியங்களும் காணப்படுகின்றன.
  • ஆயுர்வேத திணைக்களம் முதலான நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட கிடைப்பதற்கரிய நூல்களும் திணைக்கள நூலகத்தில் காணப்படுகின்றன.
  • நீங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்பவராயின், பட்டப்படிப்பின் பின்னரான கல்வியைப் பயில்பவராயின் அல்லது மொழி ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவராயின் அரசகரும மொழிகள் ஆணையாளர் அவர்களின் அனுமதியுடன் உங்களுக்கு எமது நூலகத்தைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியும்.
  • எமது நூலகத்திலுள்ள புத்தகங்கள் கணினிமயப்படுத்தப்பட்டு பட்டியற்படுத்தப்பட்டுள்ளதால் உங்களுக்குத் தேவையான விபரங்களை மிக இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.
  • மேலும் எமது நூலகத்தின் தரவுகள் தேசிய நூலக மற்றும் ஆவணப்படுத்தற் சேவைகள் சபையினால் பேணப்பட்டு வரும் தேசிய ரீதியிலான புத்தகத் தொகுதிகளின் பட்டியலில் (National Union Catalogue) உள்ளடக்கப்பட்டுள்ளன.