மார்ச் மாதம் 02 ஆம் திகதியில் இடம்பெறுகின்ற சிங்கள மொழித் தினத்தை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சியொன்று 2023 மார்ச் மாதம் 02 ஆம் திகதி குருநாகல் கனேவத்தை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கனேவத்தை பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே​ நடாத்தப்பட்ட மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்குதல், கனேவத்தை பிரிவிலுள்ள 17 பாடசாலை நூலகங்களுக்கு அரசகரும மொழிகள் திணைக்களத்தின் நூல் வெளியீடுகள் அடங்கிய நூல் தொகுதிகளை வழங்குதல் அதேபோன்று மொழி தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு என்பவற்றுடன் கூடியதாக இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அரசகரும மொழிகள் திணைக்களமும், கனேவத்தை பிரதேச செயலகமும் இணைந்து இந் நிகழ்ச்சியை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.