ஐக்கிய நாடுகளின் அமைப்பினால் உத்தேசிக்கப்பட்ட “மொழிபெயர்ப்பு மற்றும் சுதேச மொழிகள்” - “Translations and Indigenous Languages” எனும் தொனிப் பொருளில் சர்வதேச மொழிபெயர்ப்புத் தினமானது அரசகரும மொழிகள் திணைக்களத்தில் 2019.09.30 ஆம் திகதி திணைக்கள வளாகத்தில் மூன்றாவது முறையாகவும் கோலாகலமாக கொண்டாடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு “மொழிப்பெயர்ப்பும் சுதேசமொழிகளும்” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 15 வயது மற்றும் 25 வயதிற்குட்பட்ட பாடசாலை மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கான திறந்த சுவரொட்டிப் போட்டியை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

International Translation Day

சர்வதேச மொழிபெயர்ப்பு தின ஞாபகார்த்த விழா செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி கொண்டாடப்படுவதுடன், வளர்ந்து வரும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவுகரம் நீட்டும் நோக்குடன் “காலமாற்றங்களுக்கேற்ப கலாசார மரபுரிமைமையை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் மொழிபெயர்ப்புப் போட்டி ஒன்றினை அரசகரும மொழிகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

International Mother Language Day