பரீட்சை நடைபெற்ற திகதி : 27.11.2021

பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் பெயர் பட்டியல் Click Here

 

மார்ச் மாதம் 02 ஆம் திகதியில் இடம்பெறுகின்ற சிங்கள மொழித் தினத்தை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சியொன்று 2023 மார்ச் மாதம் 02 ஆம் திகதி குருநாகல் கனேவத்தை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கனேவத்தை பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே​ நடாத்தப்பட்ட மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்குதல், கனேவத்தை பிரிவிலுள்ள 17 பாடசாலை நூலகங்களுக்கு அரசகரும மொழிகள் திணைக்களத்தின் நூல் வெளியீடுகள் அடங்கிய நூல் தொகுதிகளை வழங்குதல் அதேபோன்று மொழி தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு என்பவற்றுடன் கூடியதாக இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அரசகரும மொழிகள் திணைக்களமும், கனேவத்தை பிரதேச செயலகமும் இணைந்து இந் நிகழ்ச்சியை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

அரசகரும மொழிகள் திணைக்களமும் மொறட்டுவை பல்கலைக்கழகமும் இணைந்து, மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக பாவிக்கக்கூடிய “கணனி துணைக் கருவிகள்” தொடர்பில் தெளிவூட்டும் பயிற்சி நிகழ்ச்சியொன்று 2023.01.12 ஆம் திகதி நடாத்தப்பட்டது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவில் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்ச்சியில் 59 மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

 SITA IMG1  SITA IMG2
 SITA IMG3  SITA IMG4
 SITA IMG5

 

 

 

 

மொழி ஆய்வுகூடத்தினால்  நடாத்தப்படும் அனைத்து பாடநெறிகளின் ஆரம்ப நிகழ்ச்சி  2023.02. 07 ஆந் திகதி நடைபெறும்.

அன்றைய தினம் தாங்களுக்கு  பாடநெறிகளுக்காக பதிவு செய்யலாம்.

 

மொழிபெயர்ப்புக் கோரிக்கைகளுக்கான மென் பிரதிகளை doltrdv@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அத்துடன் குறித்த பணி தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிடவும்.

மேலதிக விபரங்களுக்கு,
செவந்தி ஜயவீர 0112 877 231