ஐக்கிய நாடுகளின் அமைப்பினால் உத்தேசிக்கப்பட்ட “மொழிபெயர்ப்பு மற்றும் சுதேச மொழிகள்” - “Translations and Indigenous Languages” எனும் தொனிப் பொருளில் சர்வதேச மொழிபெயர்ப்புத் தினமானது அரசகரும மொழிகள் திணைக்களத்தில் 2019.09.30 ஆம் திகதி திணைக்கள வளாகத்தில் மூன்றாவது முறையாகவும் கோலாகலமாக கொண்டாடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்காக மொழிபெயர்ப்பு போட்டியொன்று இரண்டாவது முறையாக நடாத்தப்படும். இப் போட்டியானது நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு மாத்திரமே நடாத்தப்படுகிறது.

அதற்காக பாடசாலையொன்றிலிருந்து ஒரு மொழிபெயர்ப்பு வகுதிக்கு ஒரு மாணவர் என்ற வகையில் அதிக பட்சம் மூன்று பேருக்கு பங்குபற்றும் வாய்ப்புள்ளது.

 • மொழிபெயர்ப்பு வகுதிகள்
  • (i) சிங்களம் / ஆங்கிலம் (ii) சிங்களம் / தமிழ் (iii) தமிழ் / ஆங்கிலம்
   ஒரு மொழி மூலத்தில் வழங்கப்படும் சிறு பந்தியொன்றை மற்றைய மொழிக்கு மொழிபெயர்த்தல் வேண்டும். உ+ம்:-சிங்களம் / ஆங்கிலம் வகுதியில் சிங்கள மொழியில் வழங்கப்படும் பந்தையை ஆங்கில மொழிக்கும், ஆங்கில மொழியில் வழங்கப்படும் பந்தையை சிங்கள மொழிக்கும் மொழிபெயர்த்தல் வேண்டும்.
 • போட்டி நடைபெறும் இடம் (கொழும்பில்)
  • விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.
 • போட்டி நடைபெறும் தினம்
  • 2019 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும்.
 • போட்டிற்கு விண்ணப்பித்தல்
  • இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை விண்ணப்பதாரி 2019. 08. 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் “அரசக௫ம மொழிகள் ஆணையாளர் நாயகம், அரசக௫ம மொழிகள் திணைக்களம், 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய.” எனும் விலாசத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
   க.வே. - கடித உறையில் இடது பக்கம் மேல் மூலையில் “மொழிபெயர்ப்புத் தினம் - 2019” எனக் குறிப்பிடவும்.”
 • நடுவர் குழு
  • ஒவ்வொரு மொழிபெயர்ப்பு வகுதிகளுக்குமான போட்டி முடிவுகள் 3 நடுவர் குழுக்களால் வேறுவேறாக மேற்கொள்ளப்படும். அந் நடுவர் குழுக்களில் தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும், கல்வி அமைச்சினால் பெயரிடப்படும் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குவர்.

வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் 2019. 09. 30 ஆம் திகதியன்று வழங்கப்படும். பங்குபற்றும் சகல போட்டியாளர்களுக்கும் வழங்கப்படும் சான்றிதழ்கள் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கம் / தொலைநகல், எமது இணையதளம் மற்றும் மின்னஞ்சல் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்

தொலைபேசி இலக்கம் : +94 112 877 231
தொலைநகல் : +94 112 888 928
இணையதளம் : www.languagesdept.gov.lk
மின்னஞ்சல் : doltrsch19[at]gmail.com

Download Application : Click here