சர்வதேச மொழிபெயர்ப்பு தின ஞாபகார்த்த விழா செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி கொண்டாடப்படுவதுடன், வளர்ந்து வரும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவுகரம் நீட்டும் நோக்குடன் “காலமாற்றங்களுக்கேற்ப கலாசார மரபுரிமைமையை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் மொழிபெயர்ப்புப் போட்டி ஒன்றினை அரசகரும மொழிகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனுப்புகின்ற கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் “மொழிபெயர்ப்புப் போட்டி (சிறுகதைகள்)” எனக் குறிப்பிட்டு “அரசகரும மொழிகள் ஆணையாளர், அரசகரும மொழிகள் திணைக்களம், இல.341/7, கோட்டே வீதி, இராஜகிரிய” எனும் முகவரிக்கு தபால் மூலம் அல்லது www.languagesdept.gov.lk எனும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை 30.07.2018 அன்று அல்லது அதற்கு முன்னர் பூர்த்தி செய்து தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.

மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டிய சிறுகதைகள் பதிவு செய்து கொண்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் ஒவ்வொரு மொழி ஊடகத்திலுமான வெற்றியளர்களின் சிறுகதைகள் ‘சுபாஷா’ நினைவுமலரில் வெளியிடப்படும். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான நியதிகளும் நிபந்தனைகளும் பின்வருமாறு,

பொது நிபந்தனைகள்

  • மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் போட்டியில் பங்குபற்ற முடியும்.
  • நபரொருவர் மூன்று மொழிகளில் ஒரு மொழி ஊடகத்திற்கு மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.
  • மொழிபெயர்க்கப்பட வேண்டிய சிறுகதையானது எம்மால் வழங்கப்படும்.
  • எம்மால் வழங்கப்படும் சுட்டெண் தவிர்ந்த ஏனைய தனிப்பட்ட தகவல்கள் மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்கப்படல் கூடாது.

போட்டிக்கான நியதிகளும் நிபந்தனைகளும்

  • உங்கள் மொழிபெயர்ப்பின் PDF மற்றும் WORD ஆவணங்கள் மின்னஞ்சல் ஊடாக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • உங்கள் மொழிபெயர்ப்பானது மூல ஆவணத்தின் கருத்தினை கொண்டிருக்க வேண்டியதுடன் எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இல்லாது இருத்தல் வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு மொழிபெயர்ப்பு பணியகத்தினை 0112877231 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது www.languagesdept.gov.lk எனும் இணையத்தளத்தினூடாக அல்லது “DOL- International Translation Day 2018.” எனும் எமது முகநூலினூடாக தொடர்புகொள்ளவும்.

For registrations : Click here

Download Application : Click here