மொழிபெயர்ப்பை எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்?

translate[at]languagesdept.gov.lk

மொழிபெயர்க்க வேண்டிய ஆவணத்தை எவ்வாறு அனுப்புதல் வேண்டும்?

இணையத்தளத்திலுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து மொழிபெயர்க்க வேண்டிய ஆவணத்துடன் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மொழிபெயர்ப்புக் குழாமில் எவ்வாறு இணைந்து கொள்ளலாம்?

வருடாந்தம் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் இணையத்தளத்தில் பெயர் உள்ளடக்கப்படும். அதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அ.க.மொ.திணைக்களத்திடம் சமர்ப்பித்ததன் பின்னர் பரீட்சை நடைபெறும் தினத்தை தீர்மானித்து விண்ணப்பதாரிகளுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் குழாமில் எவ்வாறு இணைந்து கொள்ளலாம்?

அது தொடர்பாக நீதி அமைச்சிடம் விசாரித்து அறிதல் வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர்களின் பெயர், முகவரி என்பவற்றை இணையத்தளத்தில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் யாது செய்தல் வேண்டும்?

அது தொடர்பாக சரியான தரவுகள் உள்ளடங்கிய கோரிக்கைக் கடிதமொன்றை திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஊடாக அவசர மொழிபெயர்ப்புக்களை எவ்வாறு செய்து கொள்ளலாம்?

அதிகளவிலான மொழிபெயர்ப்புக்கள் கிடைக்கின்றமையினால் போதியளவு கால எல்லையொன்று இன்றி மொழிபெயர்ப்பினை பூர்த்தி செய்து வழங்க முடியாது எனவும் அம் மொழிபெயர்ப்புக்களை எமது இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு குழாமின் உத்தியோகத்தர்கள் ஊடாக பூர்த்தி செய்து கொள்ளுமாறும் அதற்கான கட்டணத்தை பொது நிர்வாக சுற்றறிக்கை 12/2003/(1)90 பிரகாரம் செலுத்துமாறும் அறிவிக்கப்படும்.