மொழியைப் பயன்படுத்துவோரின் மக்கள் தொகையியல் வேறுபாடு, தொழில்நுட்ப தாக்கம், பிற மொழிகளுடனான கலப்பு மற்றும் கொள்கை மாற்றங்கள் முதலானவை காரணமாக மொழியானது தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மொழி ஆராய்ச்சிப் பிரிவினால் இம் மாற்றங்கள் அறிக்கையிடப்படுவதுடன், புதிய போக்குகள் மற்றும் தேவைகளை இனங்காணல், தேவைப்படுமிடத்து சரியான மொழிப் பாவனையை சான்றுப்படுத்துவதற்குரிய வசதிகளை வழங்கல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நீங்களும் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளீர்களா அல்லது அதில் ஆர்வம் கொண்டுள்ளீர்களா ?

அவ்வாறெனில், உங்களது கருத்துக்களையும் பிரேரணைகளையும் நாம் மதிப்புடன் வரவேற்கின்றோம்.