அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளராக செயற்படும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவினால் அரச மற்றும் பகுதி அளவிலான அரச நிறுவனங்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்பு பணிகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிறைவேற்றப்படுகின்றன. திணைக்களமானது மொழிபெயர்ப்புச் சேவைகளை அரச நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது. பகுதியளவிலான அரச நிறுவனங்களுக்கு இம்மொழிபெயர்ப்புச் சேவைகள் வழங்கப்படும்போது, பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 2003/(1) பிரகாரம் கட்டணம் அறவிடப்படுகிறது.

உங்களது நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாவிடின் மாத்திரமே எமது சேவையை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். தங்களுக்கு தொழில் ரீதியிலான சிறந்த மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

அதன் பொருட்டு,

  • இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி ஊடாக உரிய ஆலோசனைகளின் படி ஆவணங்களை எமக்கு அனுப்பி வைக்கவும். மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் மீளவும் மின்னஞ்சல் ஊடாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • இணைய வசதிகள் இல்லையெனில், முகப்புக் கடிதத்துடன் அச்சுப் பிரதியை அரசகரும மொழிகள் ஆணையாளருக்கு அனுப்பி வைப்பதன் மூலம் உங்களது தேவையைப் பூர்த்திசெய்து கொள்ள முடியும்.

உங்களது தேவையைப் பூர்த்திசெய்ய எவ்வளவு காலம் எடுக்கும்?

நிறுவனங்களிலிருந்து ஆவணங்கள் கிடைக்கப்பெறும் ஒழுங்குமுறைக்கேற்பவே மொழிபெயர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும், அவசர தேவைப்பாட்டின் அடிப்படையில் இது மாற்றமடையலாம். மூல ஆவணத்தின் தன்மைக்கேற்ப மொழிபெயர்ப்புக்கான கால அளவு வேறுபடும்.